காலை எழுந்தவுடன் நேராகக் மணியை பார்தேன் மணி 7 ஆகிவிட்டது .அடடா குமார் வீட்டு கிரஹபிரவேசம் போக வேண்டும் லேட்டாகிவிட்டதே என்று அவசரம் அவசரமாக கிளம்பினேன் . சிலு சிலு என்று காற்று அடித்து கொண்டிருந்தது . ஒரு வாரமாக மழை ..இன்று சிறிது விட்டிருந்தது .. என் நண்பன் குமார் சிட்டியிலிருந்து தாம்பரம் தள்ளி உள்ள பெருங்கலதூரில் சதனந்தபுரத்தில்
மனை வாங்கி 5 வருடமா போட்டிருந்தான் ..இப்பதான் VRS வாங்கிகொண்டு சிறுது பணத்தை போட்டு வீடு கட்டினான். நானும் இங்குதான் சற்று தள்ளி புது பெருங்கலதூரில் உள்ளேன்.. சரி சரி சீக்கிரமாக போக வேண்டும் என நினைத்து கொண்டே ஸ்கூட்டி பிளஸ் வண்டியை உதைத்தேன் ....நான் இங்குவந்து சுமார் 20 வருடம் ஆகிறது ..ஹும் அப்போ இருந்த ஊரா இது .. எப்பிடி ஆகி விட்டது ..
சிறிய கிராமம் போல் இருக்கும் .. தாம்பரம் போய்தான் சிட்டிக்கு போக வேண்டும் ..எலெக்ட்ரிக் ட்ரெயின் ஒன்றுதான் வழி . ஆனால் என்றைக்கு மெட்ரோ ட்ரெயின் போட ஆரம்பித்தார்களோ அன்று முதல் மிகவும் நெரிசல் ஆகிவிட்டது . எல்லா பஸ்சும் byepass வழியாக செல்வதால் இங்கு temporary busstand போட்டு விட்டார்கள் .ஒரே நெரிசல் ..ரோடை கிராஸ் செய்வதற்குள் என்பாடு உன்பாடு ஆகி விடும் .. என்ன செய்வது? . எங்கள் ஆபீஸ் வர ரோடை கிராஸ் செய்து தமிழ்ச்செல்வி எப்பிடி வருகிறார் என்று தெரியவில்லை. ..அட கதைக்கு வாருங்கள்.. ஏதோதோ சொலிக்கொண்டு வருகிறேன் .
மெல்ல ரோடை கிராஸ் செய்து குமார் வீடு வந்து சேர்த்தேன் . பரவாயில்லை நன்கு கட்டியிருந்தான் .. சிறிய வீடு என்றாலும் அம்சமாக இருந்தது. வீட்டின் மொட்டை மாடியில் ஏறி பார்த்தால் அருகிலே வண்டலூர் மலை தெரிந்தது. பச்சை பசேல் என்று மரங்களின் அணிவகுப்பு கண்ணுக்கு மிக குளிர்சியாக இருந்தது. நான் சென்னையில் இருகிறேனா அல்லது வேறு எங்காவது மலை வாசஸ்தலத்துக்கு வந்து விட்டேனா என்று இருந்தது.
சில்லென்று காற்று வந்ததோ ..என்னென்று கேட்டு சொன்னதோ .. என்ற SPB பாடல் நினைவுக்கு வந்தது ..என்னை எங்கோ இழுத்து சென்றது .. ஹும் என்ற ஏக்க பெருமூச்சு விட்டேன் ..குமார் தன இரண்டு பெண்களுக்கும் கல்யாணம் செய்து விட்டு ஹாயாக மனைவியோடு தனிக்குடித்தனம் வந்து விட்டான். என்னடா வீடு நல்லா இருக்கா..நான் நம்ப நண்பர்கள் யாரையும் கூப்பிடவில்லை ..பொறாமை புடிச்சவணுக .. என்றபடி வந்தான் என் நண்பன். மனதில் இருந்த ஏக்கம் பொறாமை எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் ..ஏய் ரொம்ப நல்லா இருக்குடா ... கை கொடுடா என்று பாராட்டினேன். சிறிய நினைவு பரிசு ஒன்றை கொடுத்து விட்டு உணவு அருந்திவிட்டு வந்தேன். குமாரிடம் சொல்லிக்கொண்டு என் வீடு வந்து சேர்ந்தேன்.
மறுநாள் காலை எப்பொழுதும் போல் எழுந்து பேப்பர் படிக்க உட்கார்தேன் . அப்போது எதிர் வீட்டு ராஜகோபால் ..சார் உங்களுக்கு விஷயம் தெரியுமா சதனந்தபுரம் குளத்தில முதலை இருக்காம். யாரோ பாவம.புது மனிதர் போலிருக்கு .விவரம் தெரியாம போய் குளத்தில குளிக்க போய் முதலை கிட்ட மட்டிகிட்டாராம் ... ஒரே கூட்டமா இருக்கு. போலீஸ் இப்பதான் போயிருக்காங்க .. பாவம என்றார் .. எனக்கு பகீர் என்று ஆகிவிட்டது. குமாருக்கு எதாவது ஆகி இருக்குமோ என்று பதைத்தது. உடனே ஸ்கூட்டி எடுத்துக்கொண்டு பறந்தேன். குமார் வீட்டுகருகில் ஒரே கூட்டம். நெஞ்சு படபடத்தது . கடவுளை வேண்டி கொண்டே போனேன்.அங்கே குமார் வெளியே நின்று கொண்டிருந்தான். ..என்னடா .. என்று என் கையை பிடித்தான் . உனக்கு ஒன்றும் ஆகலையே .. நான் விஷயம் கேட்டு ஓடி வரேன் என்றேன் .. அட ஒன்றும் இல்லடா.. யாரு தெரியாம குளத்தில இறங்கிட்டாங்க ..காப்ற்றியகிவிட்டது ஒன்றும் பயமில்லை என்றான்.. இதுக்காகவா வந்தே என்றான்.. ஆமாட என்றேன் .. அட ..நீ இங்க இருக்க என்ற தைரியத்துலதான் நான் வீடு கட்டி குடி வந்தேன் என்றான் . என் ஏக்கம் ..பொறாமை எல்லாம் காற்றில் பறந்தது.
super ...............innum yezhudhunga..........ungal padaippai yeadhir paarkiren....
ReplyDelete